வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி, விசா மோசடி, மனிதர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் மோசடிகள் மற்றும் மனித கடத்தல் தொடர்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் பொலிஸாரால் பெறப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கைஇ மற்றும் அது தொடர்பில் தொடங்கப்பட்ட விசாரணைகள், இடம்பெற்ற கைதுகள், தொடரப்பட்ட வழக்குகள், தண்டனை வழங்கப்பட்ட வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு? என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சபையில் கேள்வியெழுப்பினார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு, வேலைக்கான விசா அல்லது ஐரோப்பிய நாடுகளுக்குக் குடிபெயர்வதற்கான வாய்ப்புகள் வழங்குவதாக வாக்குறுதியளித்து,நபர்களிடமிருந்து பெருந்தொகையான பணத்தைப் பெற்று நடத்தப்படும் திட்டமிடப்பட்ட மோசடிகள் குறித்து பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இரண்டு வழிமுறைகளில் விசா மோசடிகள் இடம்பெறுகின்றன மேற்குலக நாடுகள்,கனடா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளுக்கு விசா உள்ளது. தொழில் வாய்ப்புக்களை பெற்றுத் தரலாம் என்று வாக்குறுதியளித்து நிதி பெறுதல்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஊடாக பதிவு செய்து வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று அங்கு ஆரம்பத்தில் குறிப்பிட்ட தொழிலுக்கு பதிலாக ஏனைய தொழில்கள் வழங்கப்படுகின்ற.
இவ்வாறான மோசடிகளுக்கு பல உதாரணங்களை குறிப்பிடலாம்.ஆசிப் தொழில் முகவர் நிறுவனம் 1500 சவூதி ரியால் சம்பளம் என்று குறிப்பிட்டு 100 பேரை சவூதி அரேபியாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.அங்கு சென்றவுடன் அவர்களுக்கு 400 ரியால் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் மீண்டும் நாட்டுக்கு வர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் பதிவு செய்யப்பட்ட குற்றங்களாகும்.
விமான நிலையத்திலும் மிக மோசமான வலைப்பின்னலுடான மோசடி இடம்பெறுகிறது.குறிப்பாக ஐரோப்பாஇகனடா ஆகிய நாடுகளுக்கு எவரேனும் செல்லும் போது விமான நிலையத்தில் ஒரு தரப்பினரால் காசு கேட்கப்படுகிறது.
அங்கு கேட்கப்படும் பணத்தை கொடுக்காவிட்டால் " இந்த விசாவில் எமக்கு சந்தேகம் உள்ளது " என்று குறிப்பிட்டு அவர்கள் திருப்பியனுப்படுகுறார்கள்.
தூதரகம் சென்று விசா குறித்து மீண்டும் ஆராய்வதை காட்டிலும் கேட்கும் பணத்தை கொடுத்து விட்டு செல்லும் நிலைக்கு பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.இவ்வாறான சம்பவங்கள் குறித்து என்னிடம் பலர் நேரடியாக முறைப்பாடளித்துள்ளார்கள்.
நிதி மோசடி தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடளிக்கும் போது பாரிய அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளார்கள்.மட்டக்களப்பில் பாதிக்கப்பட்ட ஒருவர் கொழும்புக்கு செல்லும் நிலை காணப்படுகிறது.
எமது பிரதேசங்களின் இளைஞர்கள் பலர் இன்று கனடா,ஐரோப்பியா,பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வதற்காக பலரிடம் காசு கொடுத்து ஏமாற்றமடைந்து இன்று கோடிக்கணக்கில் கடனாளியாகியுள்ளார்கள்.
மட்டக்களப்பில் உள்ள ஒருவர் கொழும்பில் உள்ள முகவர் நிலையத்துக்கு நிதி வழங்கி ஏமாற்றமடைந்தால் அவர் கொழும்பில் வந்து முறைப்பாடளிக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள்..
கொழும்புக்கு வந்தால் 4 ஆம் மாடிக்கு செல்லுங்கள்,சி.ஐ.டி அல்லது நிதி குற்றப்புலனாய்வு பிரிவு செல்லுங்கள் என்று அலைக்கழிக்கப்படுகிறார்கள்.சில சந்தர்ப்பங்களில் முறைப்பாடுகளும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
இதனால் பல குடும்பங்கள் சீரழிந்துள்ளன.இந்த பிரச்சினைகளை ஆராய பொலிஸ் நிலையத்தில் விசேட பிரிவை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறேன் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
