ஈழத்து சினிமாவில் புதிய அத்தியாயத்தினை உருவாக்கும் புதிய திரைப்படத்தின் முதல்பார்வை மட்டக்களப்பில் வெளியீடு

ஈழத்து சினிமாவில் புதிய அத்தியாயத்தினை உருவாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுவரும் இருமுகம் திரைப்படத்தின் முதல்பார்வை மற்றும் படத்தின் தலைப்பு வெளியிட்டுவைக்கப்பட்டது.

இரு முகம்’ திரைப்படத்தின் ஆரம்ப விழா அண்மையில் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் அதன் முதல்பார்வை மற்றும் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பு காந்திபூங்காவில்  குறித்த திரைப்படத்தின் இயக்குநர் கிஷாந்த் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம்பாக்கியநாதன் பிரதம அதிதியாக கலந்துசிறப்பித்தார்.

இந்த நிகழ்வில், திரைப்படத்தின் தலைப்பு மற்றும் படத்தின் தலைப்பு தாங்கிய போஸ்டர் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, படத்தின் இயக்குநர், தயாரிப்புக் குழு, நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் ஒரே மேடையில் ஒன்றுகூடியது சிறப்பம்சமாக அமைந்தது.

மட்டக்களப்பில் உருவாகி வரும் புதிய திரைப்பட முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, உள்ளூர் சினிமா வளர்ச்சிக்கான முக்கியமான தருணமாகவும், ‘இரு முகம்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்ததாகவும் அமைந்தது.