News Update :
Hot News »
Bagikan kepada teman!

கட்டிட நிர்மான ஒப்பந்தகாரர்களுக்கான தகமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Penulis : Anthony Leon raj on Sunday, November 18, 2018 | 6:53 AM

Sunday, November 18, 2018



(லியோன்)

தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு சென்று கட்டிட நிர்மான பணிகளில் ஈடுபட்டு நாடு திரும்பியவர்களுக்கு கட்டிட நிர்மான துறை தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டு சீடா நிறுவனத்தின் ஊடாக கட்டிட நிர்மான  துறை ஒப்பந்தகாரர்களுக்கான தகமை சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு தன்னாமுனை மியாணி நகர மண்டபத்தில் நடைபெற்றது
comments | | Read More...

பெரன்டினா தொழில் வள நிறுவனத்தின் மாணவர்களுக்கான புலமைப்பரிசில்


 
(லியோன்)

பெரன்டினா தொழில் வள நிறுவனமானது   மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் திட்டங்கள் ,சுயதொழில் கடன் உதவி ,வரிய மாணவர்களின் கல்வி நடவடிக்கை  இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பு ,,விசேட தேவையுடையவர்களுக்கான  தொழில் வாய்ப்பு ,கல்வி போன்ற அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது
comments | | Read More...

வெல்லாவெளி சிக்கன கடன் வழங்கு கூட்டுறவுச் சங்க 32ஆவது ஆண்டு விழாவும் சாதனையாளர் பாராட்டு விழாவும்

Penulis : vellavely on Saturday, November 17, 2018 | 9:04 AM

Saturday, November 17, 2018

 (படுவான்)


சிக்கன கடன் வழங்கு கூட்டுறவுச் சங்க 32ஆவது ஆண்டு விழாவும் சாதனையாளர் பாராட்டு விழாவும் இன்று (17.11.2018) வெல்லாவெளி கலாச்சார மத்திய நிலையத்தில் சங்கத்தின் தலைவர் போ.சிவநேசராசா தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வின் போது முதன்மை விருந்தினர்களான மாவட்ட அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி விசேட விருந்தினர்களான தலைமை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.கே.மகேஸ்வரன் கிராம சேவை உத்தியோகத்தர் திரு.ப.இம்சான் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.ப.சுரேஸ்குமார் மற்றும் கிராமத்தில் உள்ள சமூக அமைப்புக்களின் தலைவர்கள் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின்போது வெல்லாவெளி கடன் வழங்கும் சங்கமானது மிக நீண்டகாலமாக முப்பத்திரண்டு ஆண்டுகளை தொட்டு நிக்கின்றது. அந்த வகையில் சங்கத்தின் வழச்சியும் அதனுடைய பெறுமானங்களும் மிகவும் உயந்தவை 
நூற்றுக்கு மேற்பட்ட அங்கத்தவர்களைக் கொண்டு இயங்கிய சங்கமானது இன்று பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கும் துயரங்களுக்கும் ஆற்பட்டு இடைக்காலத்திலே நாட்டில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்து இன்றும் நிலைத்து நிற்கின்றது. 
காலப்போக்கில் தோன்றிய சங்கங்கள் பல காணாமல்போய்விட்ட நிலையிலே இன்று இந்த சங்கம் முப்பத்திரெண்டாவது அகவையும் சிறப்பாக செயல்பட்ட அங்கத்தவர்களுக்கு விருதினையும் வழங்கி முன்னோடியாக இன்று தடம்பதித்துள்ளது.
இலங்கையில் கூட்டுறவு வரலாறானது  மிகவும் நீண்ட பழைமைகொண்டது 1804ம்ஆண்டு இலங்கையில் கூட்டுறவு சங்கம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தாகும்
   





















comments | | Read More...

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு கருத்தரங்கும் ,கண்காட்சியும்



(லியோன்)

மட்டக்களப்பு குடியிருப்பு சித்த ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு “ சுதேச மருந்துதுவத்தின் ஊடாக நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ‘ எனும் தலைப்பின் கீழ் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு கருத்தரங்கும் ,கண்காட்சியும் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் திருமதி ஜெயலட்சுமி பாஸ்கரன் தலைமையில் இன்று  வைத்தியசாலையில் நடைபெற்றது
comments | | Read More...

மாநகர சபையின் துரித அபிவிருத்தி திட்டங்கள்



 (லியோன்)


மட்டக்களப்பு மாநகர சபையின் துரித அபிவிருத்தி வேலைத்திட்டத்தின்  கீழ் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேதமடைந்து வீதிகள்  காணப்படும்  புனரமைப்பு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
comments | | Read More...

கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலய ஆசிரியர் தின நிகழ்வு


  (லியோன்)

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட   மட்டக்களப்பு கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலய ஆசிரியர் தின   நிகழ்வுகள்   பாடசாலை  அபிவிருத்தி குழு உறுப்பினர் அன்பழகன் ஒழுங்கமைப்பில் பாடசாலை ஆசிரியர்களின்  ஒழுங்கமைப்பில் அதிபர் . டி .அருமைத்துரை   தலைமையில்  மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது . 
comments | | Read More...

ஆயுர்வேத நடமாடும் இலவச மருத்துவ முகாம்


 (லியோன்)

சுகாதார ,போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் ஆயுர்வேத திணைக்களமும் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் தொற்றா நோய் சிகிச்சை  ஆயுர்வேத நடமாடும் இலவச மருத்துவ முகாம் மட்டக்களப்பு ஜெயந்திபுரம் முதியோர் கட்டிட்ட தொகுதியில் நடைபெற்றது
comments | | Read More...

மட்டக்களப்பு மாநகரசபையில் மாபெரும் புத்தக கண்காட்சி –அனைவரையும் அழைக்கின்றது மாநகரசபை

Penulis : kirishnakumar on Friday, November 16, 2018 | 11:29 PM

Friday, November 16, 2018

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் மாபெரும் புத்தக கண்காட்சி இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் ஆரம்பமானது.
comments | | Read More...

போரதீவுப்பற்றில் குளங்கள் மக்களிடம் கையளிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சங்கர்புரம் மற்றும் களுமுந்தன்வெளி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட சிறு குளங்கள் இன்று திறந்துவைக்கப்பட்டன.
comments | | Read More...

மட்டக்களப்பில் லயன்ஸ் கழக உறுப்பினர்கள் விழிப்புணர்வு

சர்வதேச நீரிழிவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
comments | | Read More...

மோசமான நிலையில் உள்ள வீதிகளை செப்பனிடும் பணிகள் ஆரம்பம்

Penulis : kirishnakumar on Thursday, November 15, 2018 | 8:55 AM

Thursday, November 15, 2018

மட்டக்களப்பு மாநகர சபையின் “துரித வீதி அபிவிருத்தித் திட்டத்தின்” கீழ் மாநகர எல்லைக்குட்பட்ட பல வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. மாநகர சபைக்கு சொந்தமான கிட்டத்தட்ட 15க்கும் அதிகமான வீதிகள் மேற்படி திட்டத்தில் இணைக்கப்பட்டு, மிக விரைவாக அபிவிருத்தி செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
comments | | Read More...

சட்டவிரோதமான முறையில் உரிமைகோரிவந்த பாரிய வடிகான்களை கையகப்படுத்தும் நடவடிக்கை


(லியோன்)

தனியாரால் சட்டவிரோதமான முறையில் அடாத்தாக பிடித்து உரிமைகோரிவந்த பாரிய வடிகான்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாநகர மேற்கொண்டு வருகின்றது.
comments | | Read More...

நுளம்புக்கான புகை விசிறி கருவிகள் கையளிக்கும் நிகழ்வு


  
(லியோன்)

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவகத்துடன் இணைந்து அம்கோர் நிறுவனம்  டெங்கு நுளம்பு பெருக்கத்தினை  கட்டுப்படுத்தும் செயற்றிட்டத்தினை மாவட்ட ரீதியில் நடைமுறைப்படுத்தி வருகின்றது
comments | | Read More...

திருக்கல்யாண விசேட பூஜை நிகழ்வு

(

(லியோன்)

ஸ்கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாள் திருக்கல்யாண விசேட பூஜை நிகழ்வு மட்டக்களப்பு செல்வநாயகம் வீதி  ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது
comments | | Read More...

தேசிய வாசிப்பு மாதத்தின் இறுதி நாள் நிகழ்வு

Penulis : Anthony Leon raj on Wednesday, November 14, 2018 | 9:02 AM

Wednesday, November 14, 2018


 (லியோன்)

வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் ஒக்டோபர் மாதத்தினை தேசிய வாசிப்பு மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டு தேசிய ரீதியில் விசேட  நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன
comments | | Read More...

புளியந்தீவு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலய சூரம்சம்ஹார நிகழ்வு




 (லியோன்)

உலகளாவிய ரீதியில் உள்ள இந்து ஆலயங்களில் கந்த ஸஷ்டி விரத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த சூரசம்ஹார நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.
comments | | Read More...

சிறந்த 43 கமக்காரர்களுக்கு ஒருநாள் நிகழ்சித்திட்டம்

 (படுவான் எஸ்.நவா)

சமுர்த்தி திட்டத்தின் “வலுவும் சிறப்பும்; கொண்ட சிறந்த  43 கமக்காரர்களுக்கு ஒருநாள் நிகழ்சித்திட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலக சமுர்த்தி மகாசங்க கேட்போர் கூடத்தில் (13)சமுர்த்தி தலைமையக முகாமையாளர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின்போது பிரதேச செயலகத்தின் உதவி பிரதெச செயலாளர் எஸ்.புவனேந்திரன் முகாமைத்துவப்பணிப்பாளர் எஸ்.தியாகராசா வளவாளர்களான த.சசிகுமார் ந.விவேகானந்தராஜா (விவசாய போதனாசிரியர்கள்)  கருத்திட்ட முகாமையாளர் எஸ்.சபாரெத்தினம் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.



இதன்போது கருத்துத்தெரிவித்த உதவிப்பிரதேச செயலாளர் எமது பிரதேசத்தில் அதிகமானவர்கள் விவசாய மேட்டுநிலப் பயிர்செய்கையினை நம்பி வாழ்கின்றவர்கள் இதனடிப்படையில் வீட்டுத்தோட்டம் செய்வதன் மூலம் எங்களுக்கான உணவுத்தேவையினை நிறைவேற்றக் கூடியதாகவும் பொருளாதார ரீதியில் எமது செலவுகளை  மிகுதிபடுத்தக்கூடியதாகவும் இருக்கும்
 இன்று சாப்பிணடுகின்ற உணவில் தொடர்ந்து  நஞ்சு கலந்ததாகவே காணப்படுகின்றது.இதன்காரணமாக நாங்கள் படிப்படியாக தற்பொழுது நஞ்சற்ற உணவுகளை உற்பத்திசெய்கின்ற வேலைத்திட்டங்கள் படிப்படியாக நடைபெற்றுக்கொண்ட வருகின்றது. 
பாரம்பரிய ஆரம்ப காலத்தில் பின்பற்றிய முறைகளிலே சேதனைப்பசளை அதேபோன்று சேதன களைநாசினகைளை பாவிப்பதற்கு நாங்கள் மீண்டும் தயாராகவேண்டிய சூழ்நிலையுள்ளது. 
ஆகவே ஒவ்வொரு குடும்பமும் எங்களுக்கு தேவையான சில உணவு வகையாவது உற்பத்தி செய்துகொள்வோமாக இருந்தால் நஞ்சற்ற முறையிலாவது இருந்து எங்களுடைய ஆரோக்கியம் குழந்தைகளுடைய ஆரோக்கித்திற்கு சிறந்ததாகவிருக்கும்  
எனவே இன்றைய இந்த வளவாளர்களுடைய கருத்தரங்கு மிகவும் பயனுடையதாகவிருக்கும் இவற்றினை நீங்கள் பின்பற்றி செயல்படவேண்டுமென தனதுரையில் குறிப்பிட்டருந்தார்








comments | | Read More...

மட்டக்களப்பு லிப்ட் நிறுவனத்தினால் இளைஞர் யுவதிகளுக்கான திறன் மேம்பாட்டுத்திட்டம்


 
(லியோன்)
  

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள  லிப்ட் தன்னார்வ தொண்டு நிறுவனமானது மாவட்டத்தில் பெண்கள் மற்றும் இளைஞர் யுவதிகளை சமூக பொருளாதார திறன் மேம்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.
comments | | Read More...

ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் சூர சம்ஹாரம்

தமிழ் கடவுளான முருகப் பெருமானை நோக்கி அனுஷ்டிக்கப்படுகின்ற விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும். இந்த விரதம் கடந்த 8ம் திகதி ஆரம்பமாகியது. இன்று காலை கும்பம் கரைக்கும் நிகழ்வுடன் விரதம் நிறைவுபெற்றது.
comments | | Read More...

பாடசாலை மாணவர்களது சீருடை மற்றும் சிகை அலங்காரம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

Penulis : vellavely on Tuesday, November 13, 2018 | 7:53 AM

Tuesday, November 13, 2018

 (படுவான்.எஸ்.நவா)

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிகை அலங்கார உரிமையாளர்கள் ஆடை அலங்கார உரிமையாளர்களுக்கான விசேட விழிப்புணர்வு நிகழ்வு பிரதேசத்தின் பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (13)நடைபெற்றிருந்தது.
இந்நிகழ்வின்போது கருத்துத்தெரிவித்த பிரதேச செயலாளர் போரதீவுப்பற்று கோட்டைகல்வி அதிகாரி போன்றோர்கள் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திலுள்ள பட்டிருப்பு வலயத்தில் 69 பாடசாலைகளில் இதே போன்ற நிகழ்வு இடம்பெற்று நடைமுறைப்படுத்தப்பட்டு வெற்றியளித்துள்ளது.
எனவே எதிர்வருகின்ற 2019ம் ஆண்டில் இப்பிரதேசத்தில்  நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு சிகை அலங்கார உரிமையாளர்கள் ஆடை அலங்கார உரிமையாளர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமெனவும்
குறிப்பாக பிரதேச சபைக்கு  முழுமையான ஒரு கடப்பாடுள்ளது இவர்களுக்கான அனுமதியினை பிரதேச சபை வழங்க வேண்டுமெனவும்;  மாணவர்களுக்கு இரண்டு வகையான கடமைகள் உள்ளது. ஒன்று சீருடை சம்மந்தமான நெறிப்படுத்தல் இரண்டாவது முடிவெட்டுதல் தொடர்பான நெறிப்படுத்தல் குறிப்பாக ஆண் மாணவர்கள் தரம் 09 தொடக்கம் 13 வரை உள்ள மாணவர்கள் மிகவும் நேர்த்தியாகவும் காற்சட்டை சேட் எப்படி எவ்வாறு படத்தில் உள்ளவாறு கடைப்பிடிக்கவேண்டுமெனவும்  பெண் மாணவர்கள் சீருடைகள் களுத்துப் பட்டி போன்றவை எவ்வாறு அணிய செயல்படவேண்டுமெனவும்  தனதுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இதன்போது பிரதேச செயலாளர் ஆர் ராகுலநாயகி உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன் கோட்டைக்கல்வி அதிகாரி ரீ.அருள்ராசா சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு உத்தியோகத்தர்  மற்றும் சிகையலங்கார உரிமையாளர்கள் ஆடை அலங்கார உரிமையாளர்கள் என்பன ஏராளமானோர் கலந்துகொண்டனர்.







comments | | Read More...

free hit counter

Popular posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger