பாசிக்குடா ஹோட்டல்கள் முறையாக வரி செலுத்துவதில்லை - சாணக்கியன் எம்பி


வடக்கு - கிழக்கு மாகாணங்களில் சுற்றுலா துறையை மேம்படுத்த 2018 ஆம் ஆண்டு முதல் போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை.பாசிக்குடா பகுதியில் 17 ஹோட்டல்கள் உள்ளன.இந்த ஹோட்டல்கள் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒரு தொகை நிதியை செலுத்துகின்றன.

ஆனால் இந்த ஹோட்டல்கள் பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் செலுத்த வேண்டிய நூற்றுக்கு 1 சதவீத வரியில் ஒரு ரூபாவை கூட இதுவரையில் செலுத்தவில்லை.

இது தொடர்பில் ஆவணங்களை கோரி கடிதம் எழுதினோம்.ஆனால் இதுவரையில் அதற்கு இதுவரையில் பதில் கிடைக்கவில்லை.ஆகவே இதுகுறித்து உடன் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

மட்டக்களப்பில் பாசிக்குடா பகுதியில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் மாஹிர் என்பவர் உள்ளார்.இவர் 12 ஆண்டுகாலமாக அப்பகுதியில் பணி புரிகிறார்.அவர் எமக்கு எவ்வித ஒத்துழைப்பும் வழங்குவதில்லை.

இந்த நபர் அரசுக்கோ அல்லது சுற்றுலா அதிகார சபைக்கோ பணி புரிவதில்லை.பாசிக்குடாவில் உள்ள ஹோட்டல்களுக்கு்வேலை செய்கிறார்.

பாசிக்குடா ஹோட்டலில் இருந்து தலா 1 இலட்சம் ரூபாவேனும் கிடைக்கப்பெற வேண்டும். ஆனால் அவ்வாறு கிடைப்பதில்லை.அரச வருமானம் இழக்கப்படுகிறது.

பாசிக்குடா பகுதியில் 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு  பிரதான வர்த்தகர்ளுக்கு காணிகள்,ஹோட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்த தரப்பினர் முறையாக வரி செலுத்துவதில்லை.இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்  தெரிவித்தார்.