மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று காலை பெரியகல்லாறு கனடியன் வீதியில் உள்ள வீட்டில் இருந்து பிரான்சிஸ் ஜெனிற்றன்(30வயது)என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் பட்டிருக்கு கல்வி வலயத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் ஆசிரியராக கடமையாற்றிவருவதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.