தளவாய் விஷ்ணு ஆலயம் ஊடாக மாணவர்களுக்கு உதவி திட்டங்கள்!


 தளவாய் விஷ்ணு ஆலயம் ஊடாக மாணவர்களுக்கு உதவி திட்டங்கள்!

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று தளவாய் கிராமத்தில் இருந்து முதலாம் தரத்திற்கு தெரிவாகிய மாணவர்களுக்கான உதவி திட்டங்கள் தளவாய் விஷ்ணு ஆலயம் ஊடாக வழங்கி வைக்கப்பட்டன.

 தளவாய் கிராமத்தில் உள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் தளவாய் ஸ்ரீனிவாச வெங்கடேஸ்வர மஹா விஷ்னு ஆலய புனருஸ்தபகர் ம. குகேந்திரன் (செல்வா ) அவர்களின் நிதி உதவிகள் மூலம் 

  ஆலயத்தின் நிர்வாக சபை ஊடாக  கிராமத்தில் இருந்து முதலாம் தரத்திற்கு தெரிவாகிய மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள்இ புத்தகப் பைகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது டன் ஒவ்வொரு மாணவர்களுக்கும் இரண்டாயிரம் ரூபாய் வைப்பிலிடப்பட்டு வங்கி கணக்குகள் திறக்கப்பட்டு வங்கி கணக்கு புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இங்கு கருத்து தெரிவித்த ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தனின் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

 தளவாயில் அமைக்கப்பட்ட இந்து ஆலயமான ஸ்ரீனிவாச வெங்கடேஸ்வர மஹா விஷ்னு ஆலயத்தின் புனருஸ்தாபகர் ம. குகேந்திரன் (செல்வா ) அவர்கள் தளவாய் கிராமத்தின் அபிவிருத்திக்காகவும்இ கிராமத்தின் கல்வி வளர்ச்சிஇவாழ்வாதாரத்தை நோக்கமாக கொண்டு ஆலயத்தின் ஊடாக பல பணிகளை முன்னெடுத்து வருகிறார்.

 தளவாய் பாடசாலை ஆலயங்கள்இமாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான பல உதவித்திட்டங்களை கடந்த காலந் தொட்டு இன்று வரை முன்னெடுத்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.

 அவரின் சமூக சேவைகளை பாராட்டுவதோடு இந்து ஆலயங்கள் இது போன்ற மக்கள் பணிகளில் ஈடுபட்டு வருவதும் அதற்கான உந்து சக்தியாக இருக்கும் செல்வா அண்ணனின் பணிக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

 

இன் நிகழ்வின் சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன் தளவாய் பாடசாலை அதிபர் த.நிசாந்தன் தளவாய் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் மு.ராகுலன் தளவாய் மீனவர் சங்க தலைவர் சி.சிவராசா பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் வி.ரவிசந்திரன்

 பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களான கி.அனுஜாந்தினி  தே.ஜேசுதாஸ்

 ஆலய நிர்வாக சபை உறுப்பினர் ராஜன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.