மஞ்சந்தொடுவாய் பகுதியில் விபத்தில் படுகாயம் அடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதி!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் இடம் பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதி பிரதான வீதி போக்குவரத்து சேவை பாதிப்பு

இன்று காத்தாங்குடி போலீஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் படுகாயம் அடைந்து மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மோட்டார் சைக்கிளும் பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது

மட்டக்களப்பில் இருந்து தாழங்குடா நோக்கி பயணித்த மோட்டார்  சைக்கிளுடன் மண்னேற்றிய வாகனம் அதே திசையில்   வளைவு ஒன்றில் திரும்ப முயன்ற போது இந்த  விபத்து  சம்பவம் ஏற்பட்டுள்ளது

இடம் பெற்ற விபத்து சம்பவம் தொடர்பாக காத்தான்குடி போக்குவரத்து போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்