நுவரெலியாவில் 18.80 மில்லிமீட்டர் (மி.மீ) அளவில் மழைவீழ்ச்சி பதிவாகின

இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் 118.80 மில்லிமீட்டர் (மி.மீ) அளவில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 


நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தெலிஸ்ஸகல, ஹுனுகல் ஓயா ஆகிய பகுதிகளிலேயே இந்த 118.80 மில்லிமீட்டர் அளவிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. 

இதற்கு மேலதிகமாக, நுவரெலியாவின் வட்டவளை பகுதியில் (82 மி.மீ), கேகாலையில் (70 மி.மீ) மற்றும் இரத்தினபுரியின் எரத்த பகுதியில் (62 மி.மீ) ஆகிய இடங்களிலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியிருந்தது.