மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் 11வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இரத்ததான முகாம் ஒன்று இன்று காலை நடாத்தப்பட்டது.
கொரனா அச்சுறுத்தல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையினை தீர்;க்கும் வகையில் இந்த இரத்ததானமுகாம் நடாத்தப்பட்டது.
கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் தலைவர் விவேக்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவு டாக்டர் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது கழகத்தின் 11வது ஆண்டினை குறிக்கும் வகையிலும் இரத்ததானமுகாமின் நினைவாகவும் ரீசேட் ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டது.
இந்த இரத்ததானமுகாமினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரினால் நடாத்தப்பட்டது.
இந்த இரத்தானமுகாமில் 120 இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டு இரத்தம் வழங்கிவைத்தனர்.
கழகத்தின் 11வது ஆண்டினை குறிக்கும் வகையில் 11வது ஆண்டாகவும் இரத்ததான முகாமை கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகம் நடாத்தியமையும் சிறப்பம்சமாகும்.








