மண்டூரில் வீடு ஒன்றில் ஆயுதங்களுடன் சென்றவர்கள் தாக்குதல் -கர்ப்பிணி பெண் கணவர் வைத்தியசாலையில்

(ரஞ்சன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று ஆயுதங்களுடன் சென்றவர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று இரவு ஆயுதங்களுடன் சென்று ஏழுக்கும் மேற்பட்டவர்கள் குறித்த வீட்டின் மீது தாக்குதல் நடாத்தியுள்ளதுடன் அங்கிருந்த இளைஞர் அவரின் மனைவி மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதல் காரணமாக காயமடைந்த இளைஞர் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மனைவி களுவாஞ்சிகுடி வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

குறித்த குழுவினர் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்,சிறிய கன்டர் வாகனம் மற்றும் வீட்டில் இருந்த பொருட்களையெல்லாம் உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இன்று ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.