கடந்த தேர்தலில் வாக்களித்த அரச ஊழியர்களுக்கு நன்றி! பா.அரியநேத்திரன் காணொளி இணைப்பு

எதிர்வருகின்ற மாதம் 14,15,16 மூன்று தினங்களிலும் அரச ஊழியர்களுக்கான அஞ்சல் வாக்கெடுப்பு இடம்பெற இருக்கிறது. உண்மையிலே அரச ஊழியர்களுக்கான நன்றி செலுத்தவேண்டியதாக இருக்கின்றோம். தொடர்ச்சியாக  வடகிழக்கில் இருக்க கூடிய தமிழ் அரச ஊழியர்கள் கூடுதலாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை ஆதாரித்தவர்கள்.

இந்த முறையும் தேசிய கடமைகளை அரச ஊழியர்கள் எங்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்கவேண்டும். 

வாக்களிக்கின்றபோது ஏற்கனவே இதே வாக்கு சீட்டுலே அரச ஊழியர்கள் அஞ்சல்மூல வாக்கெடுப்பும் நிராகரிக்கப்பட்ட வரலாறுகளும் இருக்கின்றது ஆகவே நிராகரிக்கப்படாமல்  முதலிலே வீட்டிற்கும் இலக்கத்திற்கும் போடவேண்டும்.





இதிலே மிகமுக்கியமாக வாக்குசீட்டு நிராகரிப்பதற்கான மிகமுக்கியமான காரணமாக பார்ப்பது என்னவென்றால் வீட்டுசின்னத்திற்கு புள்ளடி போடுகின்ற போது மேல் கோடு அல்லது கீழ்கோடு இடையிலே இரண்டு கோட்டிற்கு பாடக்கூடியவாரு புள்ளடியீட்டால் அது நிராகரிக்கப்படும். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.