மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் மற்றும் உப்போடை பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இருவர் கல்முனை மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர்களினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண மதுவரித்திணைக்கள ஆணையாளர் எம்.பி.விஜயரட்னவின் ஆலோசனைக்கு அமைவாக கல்முனை மதுவரித்திணைக்கள பரிசோதகர் பி.காண்டிபன் தலைமையிலான குழுவினர் இந்த முன்னெடுத்த விசேட நடவடிக்கையின்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
திருச்செந்தூர் பகுதியில் கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 5000மில்லி லீற்றர் கசிப்பும் உப்போடை பகுதியில் கைதுசெய்யப்பட்டரிடம் 3000மில்லி லீற்றர் கசிப்பும் கைற்றப்பட்டதாக மதுவரித்திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
இவர்கள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி தியாகேஸ்வரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இருவரையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
