“ஈழத்து மரபுரிமை” என்ற தலைப்பில் ஒர் உரையாடல்

நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில்  அண்மையில் மட்டக்களப்பில் அரசடி பொது நூலக முதலாம் மாடியில்  அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தில்  “ஈழத்து மரபுரிமை” என்ற தலைப்பில் ஒர் உரையாடல் வெளி இடம்பெற்றது.
மாதம் தோறும் ஈழத்து மரபுரிமை சார்ந்த உரையாடலுக்கான களம் ஒன்றை அமைப்பதன் மூலம் சமூகத்தில் மரபுரிமை சார்ந்த விளிப்புணர்வு மற்றும் அறிவுட்டலை பரவலாக்கும் நோக்கத்தோடு நடாத்த ஆரம்பித்திருக்கும் இவ் உரையாடல் வெளியானது நூலக நிறுவனத்தின் கிழக்குப் பிராந்திய இணைப்பாளர் பிரசாத் சொக்கலிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

“மட்டக்களப்பு தூரிகைகளின் போக்கு ” என்ற தலைப்பில் விபுலாந்தா இசைநடனக்கல்லூரியின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி சி. சிவரெத்தினம் அவர்கள்  தமிழர்களின் கட்புல பண்பாடு குறிப்பாக மட்டக்களப்பு பண்பாடு பற்றிய புரிதல் மற்றும்  அதனூடான ஒவியங்கள் மற்றும் ஒவியர்கள் வெளிப்படுத்துகை அதனது போக்கு எனபன பற்றிய அறிமுகம் மற்றும்  குறிப்பிட்ட சில ஒவியர்கள் அவர்களின் ஒவிய படைப்புக்கள் அதனுள் வைக்கப்படும் கருத்தியல் என உரையாடல் வெளிக்கான சிறப்பான அறிமுக உரை ஆற்றியதைத் தொடர்ந்து, நிகழ்வில் கலந்து கொண்டிந்த பல்கலைக்கழக மாணவர்கள், ஒவியர்கள், ஆவலர்கள் அனைவரும் பயன்மிக்கதொரு கலந்துரையாடலினை மேற்கொண்டிருந்தனர்.

இறுதியில் நூலக நிறுவன உத்தியோகத்தர் ச.தனஞ்யன் அவர்களின் நன்றியுரையோடு உரையாடல் வெளி நிறைவுக்கு வந்தது.