இந்துக்கல்லூரியின் வருடாந்த உடல் திறனாய்வு போட்டி -இந்த ஆண்டு சம்பியனாக குணசேகரம் இல்லம்

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் வருடாந்த உடல் திறனாய்வுப்போட்டி இன்று சிறப்பாக நடைபெற்றது.

இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் அதிபர் சண்டேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சுpறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு வலய உடற்கல்வி பிரதிக்கல்வி பணிப்பாளர் வி.லவகுமார்,தொழில்நுட்ப பிரிவுக்கான உதவி கல்வி பணிப்பாளர் பிரமிதன்,பழைய மாணவர் சங்க செயலாளர் மா.சசிக்குமார்,மட்;டக்களப்பு பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் சிவநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ராஜகாரியர்,சோமசேகரம்,நல்லையா,குணசேகரம் ஆகிய இல்லங்களின் விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் மாணவர்களின் பல்வேறு உடற்கண்காட்சி நிகழ்வுகளும் நடைபெற்றன.

நுடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகளின் அடிப்படையில் குணசேகரம் இல்லம் முதலாம் இடத்தினைப்பெற்றுக்கொண்டதுடன் ராஜகாரியர் இல்லம் இரண்டாம் இடத்தினையும் சோமசேகரம் இல்லம் மூன்றாம் இடத்தினையும் நல்லையா இல்லம் நான்காம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.

இதன்போது விநோதவுடை போட்டிகள்,ஆசிரியர்களுக்கு இடையிலான போட்டிகளும் நடைபெற்றதுடன் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகளும் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்ன.