பட்டிருப்பு தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவருமான மறைந்த சி.மூ.இராசமாணிக்கம் அவர்களின் 107வது ஜனன தினத்தை முன்னிட்டு 20.01.2020 அன்று இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியனின் தலைமையில் பல்வேறுபட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி பிரதேச மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
பின்னர் மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட (பட்டிப்பளை) அரசடித்தீவு சக்தி மகளிர் இல்ல மாணவிகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச சபையின் தவிசாளரும், சக்தி இல்ல பொறுப்பாளருமான புஷ்பலிங்கம் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.