மட்டக்களப்பில் இளைஞர் வேலைத்திட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிறுகைத்தொழில் நடவடிக்கையில் ஈடுபட எண்ணியுள்ள இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு இலங்கை இளைஞர் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளனம் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.

இலங்கை வர்த்த கைத்தொழில் சம்மேளனத்தின் அனுசரணையுடன் இதற்கான பணிகளை மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளனம் மேற்கொண்டுவருகின்றது.

இதன் கீழ்; மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிறு கைத்தொழிலாளர்களை அறிவுறுத்தும் கூட்டம் பல்நோக்கு சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ரஞ்சிதமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள தொழில் முயற்சியாளர்கள்,வங்கியாளர்கள்,ஒப்பந்தகாரர்கள் கலந்துகொண்டனர்.