இந்திய அரசால் வழங்கப்படும் இளமாணி,முதுமாணிக் கற்கைகளுக்கான 2013-2014 ஆண்டுக்கான புலமைப்பரிசில் திட்டத்திற்கு தகைமையுடைய விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
இந்திய அரசின் “ஆயுஷ் புலமைப்பரிசில்” திட்டத்தின் கீழ் ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யுனானி, ஹோமியோபதி மற்றும் யோகா என்பவற்றுக்கு வழங்கப்படும் 8 புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 19 ஜுலை 2013 ஆம் ஆண்டுக்கு முன் செயலாளர், உயர்கல்வி அமைச்சு, இல.18, வார்ட் பிளேஸ், கொழும்பு 07 எனும் முகவரிக்கு முன் விண்ணப்பங்கள் கோரப்படுகிறது.
இளமாணிக் கற்கைகளுக்கான அடிப்படைத் தகைமைகள்.
1. 19.07.2013 இற்கு முதல் 22 வயதுக்குட்பட்ட இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்
2. இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் நடத்தப்படும் க.பொ.த. உயர்தர பரீட்சையில் தான் விரும்பும் புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்கும் பாடத்துறைக்கு தொடர்பான பாடங்களில் அனைத்துப் பாடங்களிலும் சித்திபெற்றிருத்தல் வேண்டும்
3. ஆங்கில மொழியில் உயர் பரிச்சயம்
4. நல்ல உடல் ஆரோக்கியமும் கற்கைக் காலத்தில் இந்தியாவில் வசிக்கத்தயாராகவிருத்தலும்
5. அரச துறையில் அல்லது நியதிச்சபையில் கடமையில் இருக்காமை
6. இளமாணிப் பட்ட நெறிக்கு ஏதாவது பல்கலைக்கழகம் ஒன்றில் ஏற்கனவே தம்மைப் பதிவு செய்திருக்காமை அல்லது அரச துறை உயர்கல்வி நிறுவனமொன்றில் முழுநேரக் கற்கை நெறிக்கு தம்மைப் பதிவு செய்திராமை.
7. க.பொ.த. உயர்தர பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பாடநெறியில் சித்தி பெற்றிருத்தல்.
முதுமாணிக் கற்கைகளுக்கான அடிப்படைத் தகைமைகள்
1. 19.07.2013 இற்கு முதல் 45 வயதுக்குட்பட்ட இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.
2. CCIM அங்கீகரிக்கப்பட்ட BAMS பட்டம் பெற்றிருத்தல் அத்துடன் கலாநிதிப்பட்டம் பெற விரும்புபவர் ஆயுர்வேதத்தில் CCIM அங்கீகரிக்கப்பட்ட MDஆபட்டம் பெற்றிருத்தல்.
3.இலங்கையின் பொதுத்துறை நிறுவனத்தில் அல்லது பல்கலைக்கழகத்தில் அல்லது அரச கூட்டுத்தாபனமொன்றில் கடமை செய்தல்
4. ஆங்கில மொழியில் உயர்பரிச்சயம்( க.பொ.த. சாதாரண தரத்தில் திறமைச் சித்தி-C)
5. நல்ல உடல் ஆரோக்கியம்
6. தற்காலிக அல்லது அமைய நிலையிலுள்ள ஒப்பந்த ஊழியர் விண்ணப்பிக்க முடியாது.
மேலதிக விபரமும் விண்ணப்பப் படிவமும் உயர்கல்வி அமைச்சின் இணையத்தி ல் http://www.mohe.gov.lk/ பெறப்படமுடியும் என்பதுடன் வடமாகாண விண்ணப்பதாரிகளுக்கு மேலதிக விளக்கத்துக்கு யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத்துணைத் தூதரகத்தை cgi.jaffna@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
