“மீன்மகள் பாடுகிறாள் வாவி மகள் ஆடுகிறாள் மட்டு.நகர் அழகான மேடையம்மா” என்னும் பாடலை மட்டக்களப்பு மக்கள் மறக்கமாட்டார்கள்.அந்த பாடலை பாடி எமது மண்ணின் பெருமையை உலகறிய செய்த பாடகன் இசை மற்றும சிற்ப கலைஞரான ஜீவம் ஜோசப் மாரடைப்பினால் உயிரிழந்தார்.
மட்டக்களப்பின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கவேண்டிய ஒரு தலை சிறந்த கலைஞனாக பரிணமித்துவந்தார்.
மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையினை அமைத்த பெருமையினையும் அவரை சார்ந்து நிற்கின்றது.
அன்றைய காலம் தொட்டு இன்றைய காலம் வரையான அனைத்துப்பகுதியிலும் தனது கலைத்திறமையினால் அனைவரையும் கவர்ந்துவருகின்றார்.
மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியின் பாண்ட் வாத்திய குழுவினை அமைப்பதில் முன்னோடியாகவும் அவர் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
