சமுர்த்தி அதிகாரிகள் வந்த வாகனம் விபத்து -மூவர் பலி-உயிரிழந்தவர்களின் விபரம் இணைப்பு

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கவந்த சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் கருத்திட்ட முகாமையாளர்கள் பயணித்த வான் மன்னம்பிட்டியில் விபத்துக்குள்ளனதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 21பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை 3.00மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இருவர் எதுவித ஆபத்துகளும் இன்றி தப்பியுள்ளனர்.

சமுர்த்தி முகாமையாளர்களுக்கான விசேட கூட்டம் ஒன்றில் கலந்துவிட்டு 21பேர் வான் ஒன்றில் திரும்பியுள்ளனர்.

வேகமாக வந்த வான் மன்னம்பிட்டி,மருதமரத்தடிப்பகுதியில் வேகமாகச்சென்று மரம் ஒன்றில் மோதியுள்ளனர்.

இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவரைத்தவிர ஏனையவர்கள் அனைவரும் படுகாயமடைந்த நிலையில் பொலநறுவை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் சுந்தரம் உதயகுமார் - (கோட்டைக்கல்லாறு) வேலுப்பிள்ளை ஜீவரெத்தினம் (வாழைச்சேனை – புதுக்குடியிருப்பு), பேரின்பம் சபேசன் (ஆரையம்பதி) ஆகியோரே பலியாகியுள்ளனர்.