மட்டக்களப்பில் மாபெரும் இரத்ததான முகாம்


மறைந்த நடராஜா கோபிநாத் அவர்களின் இரண்டாவது நினைவு தினத்தை முன்னிட்டு ,மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து உயிர்காக்கும் மனிதநேயப் பணிக்கு பங்களிக்கும் வகையில் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உளவியல் ஆலோசனை மையம் (PAC) மற்றும் Lions Club of Batticaloa Spectrum for Humanityஆகிய அமைப்புகளின் இணைந்த ஏற்பாட்டில், PAC நிர்வாக உறுப்பினர் மறைந்த நடராஜா கோபிநாத் அவர்களின் இரண்டாவது நினைவு தினத்தை முன்னிட்டு இந்த இரத்ததான முகாம் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மாநாட்டு மண்டபத்தில்  இரத்ததான முகாம் நடைபெறவுள்ளது.

மாவட்ட வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைகள் மற்றும் பல்வேறு மருத்துவத் தேவைகளுக்கான இரத்தத்தின் தேவை அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் முன்வந்து இரத்ததானம் செய்வது பல உயிர்களைக் காப்பாற்றுவதற்கு பெரும் பங்களிப்பாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இரத்ததானம் செய்யக்கூடிய அனைவரும் இந்த மனிதநேயப் பணியில் பங்கேற்று, அதிகளவான இரத்தத்தை வழங்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

“உதிரம் கொடுப்போம் – உயிரைக் காப்போம்!” என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இம்முகாமில் பொதுமக்கள், சமூக அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.