கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்பு மிக்க மட்டக்களப்பு கோவில்போரதீவு அருள்மிகு ஸ்ரீ கண்ணகியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கினை சிறப்பிக்கும் வகையிலும் மாபெரும் பாற்குட பவனியும் மஹா சங்காபிஸேஷகமும் இன்று நடைபெற்றது.கோவில்போரதீவு அருள்மிகு ஸ்ரீ கண்ணகியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்க 23ஆம் திகதி நேற்று நள்ளிரவு கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியுள்ளது.
இதனை முன்னிட்டு இன்று காலை பெரியபோரதீவு முத்துவிநாயகர் ஆலயத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்குகொண்ட பால்குட பவனி நடைபெற்றது.
புhல்குட பவனியானது ஊர்வலமாக ஆலயத்தினை வந்தடைந்ததும் ஆலயத்தில் 1008 சங்குகள் கொண்ட மஹா சங்காபிஷேகம் நடைபெற்றது.
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் இந்த சங்காபிஷேக கிரியைகள் நடைபெற்றன.
இதன்போது விசேட யாகம் நடைபெற்றதுடன் 1008 சங்குகளுக்கும் விசேட பூஜைகள் செய்யப்பட்டு பிரதான கும்பம் மற்றும் சங்குகள் ஆலயத்தினை வலம்கொண்டுவரப்பட்டு கண்ணகியம்மனுக்கு அபிசேகம் செய்யப்பட்டது.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)



.jpeg)
_1.jpeg)

