(கமலகணேஸ் தேஷாஹினி)

கிழக்கிலங்கையில் வரலாற்றுசிறப்பு மிக்க மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி அருள்மிகு ஸ்ரீ கண்ணகியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு 23ம் திகதி அன்று காலை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.

ஆன்றய தினம்  விசேட பூஜைகள் நிகழ்ந்ததுடன் அன்று மாலை ஊர் காவல் திருச்சடங்கு வெகுவிமர்சையாக  நடைபெற்றது. 

28ம் திகதி அன்று கன்னிகால் வெட்டு விழா நிகழ்வும் 29 திகதி திருக்கல்யாண நிகழ்வும் 30 திகதி நெல்லு குத்தும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.

இந்த திருச்சடங்கின் முக்கிய நிகழ்வான திருக்குளுர்த்தி வைபவமானது எதிர்வரும் 31ம் திகதி அன்று அதிகாலை நடைபெற்று திருச்சடங்கு இனிதே நிறைவுபெரும்.