"சுத்தமான இலங்கை" Clean Sri Lanka தேசிய செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு 243 காலாட்படை பிரிகேட் கட்டளை அதிகாரி கேனல் ஆர்.ஆர்.கே. ராஜபக்ச தலைமையில் நாவலடி கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வு நடைபெற்றன.
அரசாங்கத்தின் 'Clean SriLanka' திட்டத்தின் மூலம் சுற்றுச் சூழலை தூய்மையாக வைத்திருத்தல், டிஜிட்டல் மயமாக்கல், வறுமை ஒழிப்பு ஆகிய செயற்றிட்டங்கள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றநிலையில், கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் "வளமான நாடு - அழகான வாழ்க்கை" வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக நேற்றைய தினம் சுத்தமான கடற்கரை மற்றும் கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டன
இலங்கை இராணுவத்தின் தலைமையில் முதன்முறையாக 2025 ஜூலை 29 அன்று "சுத்தமான கடற்கரை ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம்" என்ற கருப்பொருளின் கீழ் இலங்கையின் கடற்கரைகளைச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் தூய்மையாக்கும் திட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இதனை முன்னிட்டு இரண்டாம் கட்ட நிகழ்வு நாடளாவிய ரீதியில் இடம் பெறுவதை முன்னிட்டு மட்டக்களப்பு நாவலடி கடற்கரையின் மதிப்பை அதிகரிக்கவும், அதனை அழகாகவும் தூய்மையாகவும் பேணும் வகையில் 243-வது காலாட்படை பிரிகேட் ஏற்பாட்டில் நாவலடி கடற்கரையினை இப்பிரதேச பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் சமூக அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் நலனில் அக்கறை கொண்டவர்களின் பங்களிப்புடன் சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன.
குறித்த கடற்கரையினை தூய்மைப்படுத்தும் பணியில் குப்பைகள், பெருமளவான பிளாஸ்ரிக் கழிவுகள் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.














