சித்திரை_திருவிழா_2026

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமும், களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயமும் இணைந்து ஏற்பாடு செய்து நடாத்திய சித்திரை திருவிழா 2026 நிகழ்வானது 09.05.2026 சனிக்கிழமை அன்று மிகச்சிறப்பான முறையில் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர் திரு உ. உதயஸ்ரீதர் மற்றும் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தலைவர் திரு கே பாஸ்கரன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்ததுடன், களுதாவளை பிரதேச ஆலயங்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வை சிறப்பிகும் வகையில் களுதாவளை பிரதேசத்தில் இயங்கும் அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுக்கள் என்பன மேடையை அலங்கரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.