கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவு படுகொலைகளின் போது உயிர் நீத்தவர்களின் ஞாபகார்த்த உதைபந்தாட்டப் போட்டி

(சசி ஜதாட்சன்)

1987 மற்றும்1991 ஆம் ஆண்டுகளில் கொக்கட்டிச்சோலை இறால் பண்ணை மற்றும் மகிழடித்தீவுப் படுகொலைகளின் போது உயிர் நீத்த உறவுகளின் ஞாபகார்த்தமாக நேற்று ஞாயிற்றுக் கிழமை மகிழடித்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி இடம்பெற்றது.

மகிழடித்தீவு மகிழை விளையாட்டுக்களகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் 26 கழகங்கள் கலந்து கொண்டதுடன் முதலதாமிடத்தினை முதலைக்குடா வினாயகர் விளையாட்டுக் கழகமும் இரண்டாமிடத்தினை காஞ்சிரங்குடா ஜெகன் விளையாட்டுக் கழகமும் மூன்றமிடத்தினை மகிழடித்தீவு மகிழை விளையாட்டுக் கழகமும் பெற்றுக் கொண்டது.

முகிழை விளையாட்டுக் கழக தலைவர் ப.புனிதசீலன் தலைமையில் இடம்பெற்ற இப் போட்டியில் கொக்கட்டிச்சோலை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி ,அதிபர் பொ.நேசதுரை,மகிழடித்தீவு ஆலய பரிபாலன சபைத் தலைவர் வி.சுந்தரலிங்கம்,இளைஞர் சேவைடி அதிகாரி அ.தயாசீலன்,பட்டிப்பளை பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டனர்.