இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசித் தகவலை அடுத்து இந்த வெடி குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
81 மில்லிமீற்றர் ரக குண்டுகள் 6, 60 மில்லிமீற்றர் ரக குண்டுகளை மீட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், நொச்சிமுனை பிரதேசத்தில் உள்ள வீதி ஒன்றில் பை ஒன்றினுள் இடப்பட்ட நிலையில் இவை மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.
இது தொடர்பான விசாரணையை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
