வாகரையில் ஆயுள் வேத மத்திய மருந்தகம் திறந்து வைக்கப்பட்டது

ஆயுள் வேத மத்திய மருந்தகம் நேற்று (ஞாயிற்றக்கிழமை) வாகரையில் திறந்து வைக்கப்பட்டது.

இதனை கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்திய அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தற்போதைய ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான  சிவநேசதுரை சந்திரகாந்தன், வாகரை பிரதேச செயலாளர் செல்வி எஸ்.ஆர்.ராகுலநாயகி பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் எஸ்.சதுர்முகம், நிருவாக உத்தியோகஸ்த்தர் எம். நவேஸ்வரன், சுதேச வைத்தியதுறைப் பணிப்பாளர் வி. சிறிதர் மற்றும்; வாகரைப் பிரதேச பொது அமைப்பக்களின் பிரதிநிதகளும் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய ஜனாதிபதியின் ஆலோசகரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் நிதி ஒதுக்கீட்டில் இந்த ஆயுர்வேத மத்திய மருந்தக கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது.

வாகரை போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசம் என்ற அடிப்படையில் இதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு குறித்த ஆயுள்வேத மத்ததிய மருந்தகம் அமைக்கப்பட்டது. ஏலவே குறித்த மருந்தகமானது வாகரை கிராம அபிவிருத்தி சங்கத்தின் கட்டிடத்திலேயே இயங்கி வந்தது.

திறந்து வைக்கப்பட்ட ஆயுள்வேத மத்திய மருந்தகக் கட்டிடமானது நிரந்தர வைத்தியர்,போதுமான மருந்துகள் உட்பட சகல வசதிகளையும் கொண்டமைதந்ததாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.