அத்துடன், இந்த சந்தேக நபரிடமிருந்து கட்டுத்துவக்கையும் கைப்பற்றியுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை, கிண்ணையடியைச் சேர்ந்த விவசாயி ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கட்டுத்துவக்கு ஒன்றை வைத்திருப்பதாக தங்களுக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்தே சந்தேக நபரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
கட்டுத்துவக்குடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
