(கிருஸ்ணா)
இந்தியாவில் கற்றுவரும் மட்டக்களப்பை சேர்ந்த இளம் இயக்குனர் கோவர்த்தனின் இரண்டாவது குறும்படமாக வெளிவரும் CHECK MATE ன் திரையிடும் நிகழ்வு மண்டபம் நிறைந்த சனக்கூட்டத்துடன் இன்று சிறப்பாக இடம்பெற்றது.
மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ.மண்டபத்தில் பிற்பகல் 04.00 மணிக்கு
கோவர்த்தனின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் புனித மிக்கல் கல்லூரியின் அதிபர் திருமதி மாசிலாமணி,அருட்தந்தை ரஜீவன் அடிகளார்,சுவாமி விபுலானந்தா அழகியல்கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் பிரேம்குமார் ஆகியோர் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்நிகழ்வினை இளம் கலைஞர் சனுக்சன் இன்பநாதன் தொகுத்தளித்தார்.மட்டக்களப்பில் இதுவைர இடம்பெற்ற இறுவெட்டு வெளியீடுகளில் அதிகளவான ரசிகர்களைக்கொண்டதாக இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கான முழு அனுசரனையினையும் பிரான்ஸ் நாட்டில் உள்ள பாடுமீன் சங்கம் வழங்கியிருந்ததுடன் இதற்கான ஊடக அனுசரனையினை எமது மட்டுநியுஸ் இணையத்தளம் வழங்கியிருந்தது.
இந்த நிகழ்வில் “நானும் ஒரு தாய்”,“CHECK MATE ” ஆகிய குறுந்திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
ஒரு கலைஞனுக்கு மிகவும் உயர்ந்த படியாக கிடைப்பது அவனது படைப்புகளுக்கான வாழ்தாகும்.இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரதம அதிதிகள் உட்பட அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்த்து தெரிவித்தானது அந்த கோவர்த்தனுக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகும்.
இந்த நிகழ்வில் அழைக்காமலேயே பல்வேறு கலைஞர்களும் பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டமை கோவர்த்தனின் வெற்றிக்கு சான்றாகும்.
கோவர்த்தனன் சினிமாத்துறையில் பிரகாசிப்பதற்கான அனைத்து தகுதிகளும் இந்த குறுந்திரைப்படம் மூலம் வெளிக்கொணரப்பட்டுள்ளதாக இங்கு அதிதிகளால் புகழ்மாலை சூடப்பட்டது.
இந்தியாவின் சினிமாத்துறையில் தனக்கென ஒரு பாதையை வகுத்து அதில் பல வெற்றிகளை குவித்த மட்டக்களப்பை சேர்ந்தவரும் இந்தியாவின் முன்னணி இயக்குனருமான பாலுமகேந்திராவின் பயிற்சி பட்டறையில் கோவர்த்தன் இயக்குனர் பயிற்சியை சிறந்த முறையில் பெற்றுள்ளார்.
இதன் வெளிப்பாடாக கோவர்த்தன் வெளியிட்ட முதலாவது குறுந்திரைப்படமான “நானும் ஒரு தாய்”வெளியீடு இந்தியாவில் ஏழு விருதுகளையும் இலங்கையில் தேசிய ரீதியில் ஒரு விருதையும் பெற்றுக்கொடுத்துள்ளது.
மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியின் பழைய மாணவரான இவர் மட்டக்களப்பின் பிரபல வர்த்தகர் பத்மநாதன்(தயாமோட்டர்ஸ்)இன் புதல்வராவார்.இவர் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் ஹோட்டல் முகாமைத்து பட்டப்படிப்பினையும் நிறைவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.