கிராண்பாஸ் பள்ளிவாயல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையில் அண்மைக்காலமாக மத சுதந்திரத்துக்கு பாரிய அச்சுறுத்தல் நிலவிவருகின்றது. பௌத்த மதத்தினை தவிர்ந்த ஏனைய மதத்தினர் பல்வேறு வழிகளில் அச்சுறுத்தப்பட்டுவருகின்றனர்.
மதத்தலங்கள் இடிக்கப்படுகின்றன,வேறு மதத்தினர் தாக்கப்படுகின்றனர்,மதங்களுக்கு எதிராக வன்முறை கொண்ட ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.இவ்வாறான செயற்பாடுகள் திறந்த நிலையிலேயே இடம்பெற்றுவருகின்றன.பாதுகாப்பு படையினர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே வழிபாட்டுத்தலங்கள் தாக்கப்படுகின்றன.இவற்றை தடுப்பது யார்,அதனை தடுப்பவர்களே வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது வேதனைதரும் விடயமாகவுள்ளது.
இஸ்லாமிய மக்களின் புனித நோன்பு நாளைக்கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்தவேளையில் அவர்களின் மதக்கடமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் இந்த நாட்டின் மதச்சுதந்திரத்தின் நிலையை சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டுகின்றது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் சூத்திரதாரிகள் எவரும் கைதுசெய்யப்படவில்லை.அம்புகள் சிலதை கைதுசெய்துவிட்டு எய்தவனை காப்பாற்ற இந்த அரசாங்கம் முயற்சிசெய்கின்றது.
இஸ்லாமிய மதத்தலங்கள் தாக்கப்பட்டுவரும் நிலையில் அரசாங்கத்துக்கு ஆதரவாக வக்காளத்து வாங்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் என்ன செய்யப்போகின்றார்கள் என்று முஸ்லிம் மக்கள் பார்த்துக்கொண்டுள்ளனர்.அவர்களின் நிலைப்பாடுகள் தொடர்பில் முஸ்லிம் மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும்.
முஸ்லிம் மக்களின் மதங்களுக்கு மட்டுமல்ல இந்து மதத்துக்கும் இந்த நாட்டில் அச்சுறுத்தல் இருந்துகொண்டே வருகின்றது.மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரே இரவில் மூன்று ஆலயங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டன.அதன் சூத்திரதாரிகள் இதுவரையில் எவரும் கைதுசெய்யப்படவில்லை.இதன் பின்னணிகள் தொடர்பில் விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
ஒரு நாட்டின் ஜனநாயக நிலைமையை அளவிடும்போது மிக முக்கியமாக மதச்சுந்திரம் நோக்கப்படுகின்றது.ஒரு மதச்சுதந்திரம் இல்லாத நாட்டில் ஜனநாயகத்தினை எதிர்பார்க்கமுடியாது.
.jpg)