மத்தியஸ்த்த சபை உறுப்பினர்களுக்கான பயிற்சி செயலமர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் மத்தியஸ்த்த சபைகளின் அங்கத்துவர்களுக்கான பயிற்சி செயலமர்வுகள் நடைபெற்றுவருகின்றன.

காத்தான்குடி மற்றும் மண்முனைப்பற்று ஆகிய இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள மத்தியஸ்த்த சபைகளின் அங்கத்துவர்களுக்கான ஐந்து நாடகள் பயிற்சி செயலமர்வு (திங்கட்கிழமை) காலை மட்டக்களப்பு பிறிட்ச் இன் விடுத்தியில் ஆரம்பமானது.

நீதியமைச்சின் கீழுள்ள மத்திய சபை ஆணைக்குழுவினால் செயற்படுத்தப்பட்டு வரும் மத்தியஸ்த்த சபைகளின் உறுப்பினர்களுக்கான இந்த பயிற்சி செயலமர்வை மத்தியஸ்த்த மற்றும் மத்தியஸ்த்த சபைகளின் உறுப்பினர்களை பயிற்று விக்கும் நிறுவனத்தினால் நடாத்தப்படுகின்றது.

மத்தியஸ்த்த மற்றும் மத்தியஸ்த்த சபைகளின் உறுப்பினர்களை பயிற்று விக்கும் நிறுவனத்தின் தலைவர் எஸ்.குணவர்த்தன தலைமையில் ஆரம்பமான இதன் ஆரம்ப நிகழ்வில் மத்தியஸ்த்த மற்றும் மத்தியஸ்த்த சபைகளின் உறுப்பினர்களை பயிற்று விக்கும் நிறுவனத்தின் பயிற்சிகளுக்கு பொறுப்பான இணைப்பாளர் யசபால டி சில்வா, மற்றும் பயிற்றுவிப்பாளர்களான எம்.ஏ.அப்துல் சல்மான், ஆர்.ஜோன் பிலிக், எம்.ரி.முபாரிஸ்,ரி.பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த பயிற்சி செயலமர்வில் காத்தான்குடி மற்றும் மண்முனைப்பற்று ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து மத்திய சபை ஆணைக்குழுவுக்கு மத்தியஸ்த்த சபைகளின் உறுப்பினராக கடமையாற்றுவதற்கு விண்ணப்பித்து நேர்முப்பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த செயலமர்வின் இறுதியில் நடாத்தப்படும் பரீட்சை மற்றும் செயலமர்வில் காட்டும் திறமை போன்ற அடிப்படையாக கொண்டு இவர்களில் தெரிவு செய்யப்படுபவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.