(லியோன்)
கிழக்கிலங்கை மட்டு நகருக்கு வடக்கே திருமலை வீதியில் சுமார் 05 கிமீ தொலைவில் சத்துருக்கொண்டான் என்னும் சிறிய கிராமம் உள்ளது.
இக் கிராமத்திலே மனவளர்ச்சிகுன்றிய சிறார்களின் புகலிடமாகத் திகழ்வதுதான் ஓசானம் நிலையம். இன் நிலையம் 03.06.1986 ஆம் ஆண்டு திருமலை மட்டக்களப்பு-அம்பாறை மறைமாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாமிபிள்ளை அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இங்கு விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்களை பாதுகாத்து பராமரித்து பயிற்சியளிக்கும் நிலையமாகும். இவ்வில்லத்தில் திருக்குடும்ப சபை அருட்சகோதரிகளின் பணியின் மூலம் பிள்ளைகளின் வளர்ச்சியில் பல முன்னேற்றங்கள் அடைந்துள்ளது.
09 பிள்ளைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இவ் இல்லம் இன்று 30 பிள்ளைகளை தன்வசம் கொண்டு செயற்பட்டு வருகின்றது. இங்கு விசேட தேவைகள் உள்ள பிள்ளைகளுக்கு பாடசாலை, தொழில்பயிற்சி நிலையம் என இரு பிரிவுகள் மூலம் அவர்களுக்கு தேவையான பயிற்சிகளும், வழிகாட்டல்களும் கொடுக்கப்படுகின்றது.
தற்போது 30 பேர் உள்ளனர். இதில் 21 பெண்கள். 9 ஆண்கள். இங்கு 06 வயது தொடக்கம் 40 வயது வரையிலான வயது நிலையினர் இருக்கின்றார்கள். இவர்களை பராமரிக்க அருட்சகோதரியும். 03 ஆசிரியர்களும் பணி ஆற்றுகின்றனர்.
இவ் இல்லம் திரு குடும்ப அருட்சகோதரிகளால் வழிநடத்தப்படடு வருகின்றது. ஓசானம் இல்லத்தின் வருடாந்த விளையாட்டு போட்டி 10.08.2013 நடைபெற்றது.
இதற்கு பிரதம விருந்தினராக மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகஸ்தர் அருள்மொழி;, சிறப்பு விருந்தினராக மியாமி தொழிற்பயிற்சி பொறுப்பாளர் அருட்தந்தை இதயராஜ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.