2012- 2013ஆம் ஆண்டுக்கான தலைவர் மட்டக்களப்பு இளைவரித் திணைக்கள உதவிப் பணிப்பாளர் எம்கணேசராஜா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம அதிதியாக கழகத்தின் மாவட்ட ஆளுனர் இம்ரான் ஹசன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
நிகழ்வில், கடந்த வருடத்துக்கான ஆறிக்கை சமர்ப்பிப்பினை செயலாளர் எஸ்.விநாயகமூர்த்தி மேற்கொண்டார். அதனையடுத்து, வறிய குடும்பங்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டன.
அத்துடன், புதிய தலைவரிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வில், மட்டக்களப்பு றோட்டறி கழகத்தின் 54ஆவது தலைவருக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வி க.தங்கேஸ்வரி, எஸ்.கனகசபை, மாவட்ட சிவில் சமூக ஒன்றியத்தின் தலைவர் எஸ்.மாமாங்கராஜா, கலாநிதி ஓ.கே.குணநாதன், கலாநிதி செல்வேந்திரன், சித்த வைத்தியர் எஸ்கண்ணன், உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.