இதுவரை திறன் அபிவிருத்திப் பயிற்சிகளை நிறைவு செய்யாத 106 பேருக்கான பயிற்சிகள் இன்று திங்கட் கிழமை 12ஆம்திகதி ஒருவார காலத்துக்கு இப் பயிற்சிகள் நiடைபெறுகின்றன.
மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்ற இன்றைய ஆரம்ப நிகழ்வில், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் எம்.ஐ.வகாப்தீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
அத்துடன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராசா, மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதிதிட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவராஜா, உதவித் திட்டமிட்ல் பணிப்பாளர்களான ஏ.சுதாகரன், ஏ.சுதர்சன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மாவட்ட திட்டமிடல் செயலக த்தின் ஏற்பாட்டில் நடைபெறும், இப் பயிற்சி நெறியில், 106 பட்டதாரிப் பயிலுனர்கள் கலந்து கொள்கின்றனர்.