லண்டன் பல்கலைக்கழகத்தின், ஆபிரிக்கக் கற்கைகள் பிரிவில், உலகத் தமிழியல் ஆய்வு நடுவத்தின் தலைவரும் ஓய்வு நிலைப் பேராசிரியருமான அ.சண்முகதாஸ் தலைமையில் இவ் ஆய்வு மாநாடு நடைபெறுகிறது.
இதில், கிழக்கு மாகாணத்தில் இருந்து தமிழ் ஆய்வாளரும் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான திருமதி ரூபி வலன்ரீனா பிரான்சிஸ் கலந்து கொள்கிறார்.
இதன்போது, தமிழ் மொழியின் முதல் அச்சு நூல்: தம்பிரான் வணக்கம் ஒரு நோக்கு எனும் தலைப்பில் அவர் உரை நிகழ்த்துகிறார்.
உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் இம் உலகத் தமிழியல் ஆய்வு நடுவத்தினால் நடாத்தப்படும் மாநாட்டுக்கு பேராசிரியர்களும், தமிழியல் ஆய்வாளர்களும் கலந்து கொள்கின்றமை சிறப்பம்சமாகும்.
உலகத் தமிழியல் ஆய்வு நடுவத்தின் ஸ்தாபகர் செல்வா செல்வத்துரையாகும். இவ் நிறுவனத்தில் அனைத்து நாடுகளையும் சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

