தொழில்நுட்பப் பயிற்சித் திணைக்களத்தின் ஊடாக சிறைக் கைதிகளுக்கான தொழில்பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்பப் பயிற்சித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சண்முகம்பிள்ளை பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்,
நீதிமன்றத்; தண்டனையினைப் பெற்று சிறையில் உள்ள கைதிகள் நீண்டகாலமாக சமூகப் புளக்கத்தில் இருந்து விடுபட்டுள்ள நிலையில், இவர்கள் விடுதலை செய்யப்படும் போது சமூகத்துடன் இணைந்து தொழில்பட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தினை ஏற்படுத்தும் நோக்கோடு இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, சிறைச்சாலை புணர்வாழ்வு மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவும் இணைந்து கைதிகளுக்கு தொழில்பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் கைதிகள் விடுதலை செய்யப்படும் காலப்பகுதிக்கு மூன்று அல்லது நான்கு வருட காலப்பகுதிக்கு முன்னர் இவர்களின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கமைய திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு மாற்றப்படும் சந்தர்ப்பத்தில் இத் தன்மைகொண்ட கைதிகளுக்கு முதல் கட்டமாக தொழில் பயிற்சி வழங்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.
இதற்கான ஆரம்ப வைபவம் கோமாகம வட்டரேகாவில் தொழில்நுட்பப் பயிற்சித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சண்முகம்பிள்ளை பாலசுப்பிரமணியத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் முதல் கட்டமாக இக் கைதிகளுக்கு NVQ மட்டம் 4 கொண்ட மின்னியல் தொழில்நுட்பக் கற்கை நெறி போதிக்கபடவுள்ளது.
இச்செயல்திட்டம் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும், வட கிழக்குக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளது.
இச்செயல்திட்டம் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும், வட கிழக்குக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளது.
இதற்கான செயல்திட்டத்தினை சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம அவர்களும், தொழில்நுட்பப் பயிற்சித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சண்முகம்பிள்ளை பாலசுப்பிரமணியத்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.
