சர்வோதய தேசோதய சபை சுவிஸ் தூதரக நிதி அனுசரணையில், சிங்கள வகுப்புகள்

சர்வோதய தேசோதய சபை ஊடாக சுவிஸ் தூதரகத்தின் நிதி அனுசரணையுடன் உரிமை மற்றும் உற்சாகமான செயல் உருவாக்குதல் திட்டத்தின் ஊடாக வவுணதீவு பிரதேசத்தில் சிங்கள மொழி வகுப்புகள் அண்மையில், ஆரம்பிக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் வி.தவராஜா, பிரதேச சபை செயலாளர் எஸ்.விஜயகுமார், சர்வோதய கிழக்கு மாகாண இணைப்பாளர் இ.எல்.எ. கரீம்,சர்வோதய சமூக வேலைத்திட்ட இணைப்பாளர் ச.மதனகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனடிப்படையில், 100 பேருக்கான 3 மாத சிங்கள மொழிப் பயிற்சிகள், வார இறுதிநாட்களில் நடைபெற்று வருகிறது.

அரச உத்தியோகத்தர்கள், தனியார் நிறுவனங்களில் தொழில் செய்பவர்கள், மாணவர்கள், தொழில்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள்,  
ஜனாதிபதியின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் உள்ள மொழிதொடர்பான பரிநச்துரையை மையமாகவைத்தே இந்தச் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

மொழி தொடர்பான  செயற்திட்டங்களின் கற்பித்தல் ஊடாக நல்லிணக்கத்தினை ஏற்படுத்துதல் இதன் நோக்கமாகும் என சர்வோதய சமூக வேலைத்திட்ட இணைப்பாளர் ச.மதனகுமார் தெரிவித்தார்.