செவிப்புலனற்றோர்களின் விளையாட்டுத்திறனை வெளிக்கொணரும் வகையில் மட்டக்களப்பு செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தினால் செப்ரம்பர் மாதத்தில் விளையாட்டுப் போட்டியொன்று நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் செப்ரம்பர்21ஆம்திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசியப்பாடசாலை மைதானத்தில் மாபெரும் விளையாட்டுப் போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அத்துடன்,மறுநாள் 22ஆம்திகதி 13ஆவது ஆண்டு விழாவும், வருடாந்தப் பொதுக் கூட்டமும் நடைபெறவுள்ளது. 

இவ் விழாக்களில், ஏனைய மாவட்டங்களான கொழும்பு, வவுனியா, திருகோணமலை,மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சங்கங்களும் கலந்து கொள்ளவுள்ளதாக மட்டக்களப்பு செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் தலைவர் சு.விக்கிரமன் தெரிவித்தார்.