பாலர் பாடசாலைக்கல்விக்கான நூல் முதன்முறையாக வெளியிடப்பட்டன

(எம்.எஸ்.நூர்)

கிழக்கு மாகாண பாலர்பாடசாலை பணியகத்தினால் முதற் தடவையாக கிழக்கு மாகாணத்தில் ஆரம்ப பிள்ளைப்பருவ கல்வி அபிவிருத்திக்கான கற்பித்தலுடனான செயற்பாடுகள் மற்றும் ஆசிரியைகளுக்கான வழிகாட்டல் கை நூல் இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பில் வைத்து வெளியீட்டு வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் இந்த கைநூலை வெளியிட்டு வைத்தார்.

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் தவிசாளர் பொன் செல்வநாயகம் தலைமையில் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள ஈஸ்ட் லகூன் ஹோட்டலில்  நடைபெற்ற இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமா லெவ்வை மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சிப்லி பாறூக் மற்றும் எம்.அமீர் பிளேன் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் வதிவிட பணி;ப்பாளர் டயமன் முதலமைச்சரின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ் உட்பட அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் மற்றும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள பாலர்பாடாலை பணியகத்தின் பணி;ப்பாளர்கள் அசிரியைகள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பிளேன் ஸ்ரீலங்கா நிறுவத்தின் நிதி அனுசரணையுடன் இந்த செயற்பாட்டு கைநூல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நூல் வெளியீட்டுக்காக சுமார் ஒரு கோடி ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாக தவிசாளர் பொன்.செல்வநாயம் தெரிவித்தார்.

இலங்கையில் முதல் முறையாக பாலர் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக கிழக்கு மாகாணத்தில் நூல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபையினால் நடாத்தப்பட்டு வரும் பாலர்பாடசாலை பணியகத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் 1822 பாலர் பாடசாலைகள் உள் வாங்கப்படுள்ளமை குறி;ப்பிடத்தக்கது.