உயிரைத் துச்சம் என நினைத்து மாணவர்களுக்கு கல்வி புகட்டச் செல்லும் ஆசிரியர்கள்

கடந்த ஒரு சில நாட்களாக மட்டக்களப்பில் பெய்து வரும் மழை காரணமாக  இன்று (11.05.2026) அக்குறாணை ஆறு பெருக்கெடுத்துள்ளது. இதனால் நகர் பகுதியில் இருந்து அக்குறாணை பாடசாலைக்கு செல்லும் ஆசிரியர்கள் மிகுந்த அச்சத்தின் மத்தியில் ஆற்றைக் கடந்து அங்குள்ள மாணவர்களுக்கு கல்வி புகட்டி வருகிறார்கள்

சிறிய மழைக்கே அக்குறாணை ஆற்றின் நிலைமை இவ்வாறு என்றால் மாரி மழை காலம் எவ்வாறு இருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்க வேண்டி உள்ளது
துறைசார் அரச அதிகாரிகளே!
மக்கள் பிரதிநிதிகளே! கற்றல் கற்பித்தலுக்குரிய இலகு போக்குவரத்தினை ஆசிரியர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் பட்சத்தில் மாணவர்களின் கல்வி தடைப்படாது என்பது உங்களுக்கு புரியும் அல்லவா இதுவரை காலமும் ஏன் இந்த ஆசிரியர்களுக்கு அவல நிலை இவ்வருடத்திலாவது அக்குறாணை ஆற்றுக்கு நிரந்தர பாலம் அமைத்துக் கொடுக்கும் பட்சத்தில் அங்குள்ள மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் தடையின்றி இடம் பெரும் அல்லவா ?
வாக்கு சேகரிப்பதற்காக மாத்திரம் எல்லைப்புற கிராமங்களுக்குச் செல்வது போன்று அங்குள்ள மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்காகவும் காலத்திற்கு காலம் வாக்கு சேகரிப்பவர்கள் அவற்றை நிவர்த்தி செய்து கொடுக்க வேண்டியதும் அவர்களின் தலையாய கடமை அல்லவா?