மட்டக்களப்பு, வெல்லாவெளி - சின்னவத்தை பகுதியில் கடந்த சில நாட்களாகக் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த நபர், இன்று வயல் நிலம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
என்ன நடந்தது?
சின்னவத்தை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய குறித்த நபர், கடந்த 8ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தார். உறவினர்கள் அவரைத் தேடி வந்த நிலையில், இன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.
விசாரணை தீவிரம்:
தகவல் அறிந்த வெல்லாவெளி பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த மரணம் கொலையா அல்லது தற்செயலாக நடந்ததா? என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
