பட்டிருப்பு வலயத்தில் மருத்துவ மற்றும் பொறியியல் பீடத்திற்கு 18 மாணவர்கள் தெரிவாகி சாதனை படைத்துள்ளனர்.
குறிப்பாக இந்த பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் க.பொ.த.சா/த பரீட்சையில் சித்தி பெற்ற பின்னர், பெருந் தொகையான மாணவர்கள் மட்டக்களப்பு நகரிலும், கல்முனை நகரிலுள்ள பிரபலமான பாடசாலைகளுக்கு உயர்தர விஞ்ஞானப் பிரிவில் கற்பதற்கு படையெடுக்கின்றனர்.
இருந்த போதிலும், தங்களது பாடசாலைகளில் விஞ்ஞானப் பிரிவில் கற்று, மருத்துவ பீடத்திற்கு 13 மாணவர்களும், பொறியியல் பீடத்திற்கு 05 மாணவர்களும் தெரிவாகி,எங்களது பிரதேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.இந்த சாதனைக்கு சொந்தக்காரரான மாணவர்கள், பெற்றோர்கள், கற்பித்த ஆசிரியர்கள், குறித்த பாடசாலை அதிபர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்!
*மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் -08 மருத்துவம்,01 பொறியியல்.
*மட்/கோட்டைக் கல்லாறு ம.வி- 02 மருத்துவம்,01 பொறியியல்.
*மட்/பெரிய கல்லாறு மத்திய கல்லூரி -02 மருத்துவம்,01 பொறியியல்
*மட்/துறை நீலாவணை ம.வி -01 மருத்துவம்.
*மட்/களுதாவளை ம.வி.- 01 பொறியியல்
*மட்/செட்டிபாளையம் ம.வி - 01 பொறியியல்.
அதேவேளை க.பொ.த உ/த பரீட்சையின் சித்தி வீதம் கடந்த ஆண்டை விட 5.25% ஆல் அதிகரித்துள்ளது.