மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அம்பிளாந்துறையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வட்டாரக் கிளையினால் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தைசெல்வா அவர்களின் சீராத்த தினமான இன்றைய தினம் 26/04/2025 இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அம்பிளாந்துறை வட்டாரக்கிளையினால் அனுஷ்டிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,பட்டிப்பளை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் செ.நகுலேஸ்வரன்,இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பட்டிப்பளை பிரதேசக் கிளை பொருளாளர் ஜெயக்குமார்,வாலிபர் முன்னணி, மகளிர் முன்னணி உறுப்பினர்கள்,பொதுமக்களும் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
![]() |