காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலயம் பெறுபேற்றில் சாதனை

கிழக்கு மாகாணத்தில் உள்ள முன்னணிப் பாடசாலையாகிய காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலயம் இன்று வெளியாகியுள்ள GCE(A/L) 2024 பெறுபேற்றில் இம்முறையும் சாதனை படைத்துள்ளது.

பல்வேறு பீடங்களுக்கும் சுமார் 71 மாணவிகள் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
இந்தச் சிறந்த -அடைவு மட்டத்தினை எட்டுவதற்கு காலாய் இருந்த மாணவர்கள், பெற்றோர், பாட ஆசிரியர்கள், பகுதித் தலைவர்கள், பிரதி அதிபர்கள், SDS, SDEC மற்றும் பழைய மாணவர் சங்கத்தினர் ஆகியோருக்கும் அதிபர் மற்றும் பாடசால நிருவாகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் மாவட்ட மட்டத்தில் பல துறைகளிலும் முன்னிலைப் பெறுபேறுகளையும் பெற்றுள்ளனர்.
வர்த்தக துறை - 01, 03, 05 ( மா. மட்டம் )
உயிரியல் துறை - 04 ( மா. மட்டம் )
கலைத் துறை - 04 ( மா. மட்டம் )