தேசிய ரீதியில் சாதனை படைத்த மட்டக்களப்பு சிறுவன் ஆருஷ்கர்

15வது ஷோடோகான் தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் 2025ம் ஆண்டுக்கான போட்டிகள் இம்மாதம் 14 மற்றும் 15ம் திகதிகளில் (2026,02,14-15) ஷோடோகான் கராத்தே டோ சம்மேளனம் இலங்கையின் ஒழுங்கமைப்பில் கொழும்பு புனித ஜோசப் கல்லூரி உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

தேசிய ரீதியில் இடம்பெற்ற 13 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலாருக்குமான போட்டியில் இலங்கையின் சகல மாவட்டங்களிலும் இருந்து போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். 

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஷோடோகான் சாம்பியன்ஸ் கராத்தே அக்கடமியின் ( SCKA) சார்பில் கலந்து கொண்ட ஜெபி ஜனார்த் ஆருஷ்கர் குமிட்டே (Kumite) பிரிவில் 21 பேர் கலந்து கொண்ட போட்டியில் 5 போட்டிகளில் சிறந்த முறையில் தனது திறமையினை வெளிக்காட்டி தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு காடா(kata) பிரிவில் 22  பேர் கலந்து கொண்ட போட்டியில் சிறந்த 8 வீரர்களுக்குள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டார்.

ஆருஷ்கர் புனித மிக்கேல் கல்லூரியில் தரம் இரண்டில் கல்வி கற்றுவருவதுடன் தொடர் பயிற்சியில் ஷோடோகான் சாம்பியன்ஸ் கராத்தே அக்கடமியில் ஈடுபட்டுவருதுடன் அவருக்கான பயிற்சிகளை பிரதான பயிற்றுவிப்பாளர் எச்.ஆர்.சில்வா,ஆர்.கௌசி மற்றும் துஷ்யந்தன் ஆகியோர் பயிற்சிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவர் இந்த போட்டியில் பங்குபெறுவதற்கு கிழக்கு மாகாண சோட்டோகன் சம்மேளனத்தின் தலைவர்  சிஹான்.கே.கேந்ரமூர்த்தி அவருக்கு வீரர் நன்றி தெரிவித்ததுடன் தேசிய ரீதியில் இப்போட்டியில் கலந்து கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்திறகு பெருமை சேர்த்துள்ளதோடு சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்று நமது நாட்டிற்கு பெருமை சேர்ப்பதே இவரது எதிர்கால இலடசியாமாக இருப்பதாகவும் ஆருஷ்கர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.