தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கத்தை சுவீகரித்து சாதனை

பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான எல்லே  சுற்றுப் போட்டியின் மட்டக்களப்பு காயன்குடா கண்ணகி வித்தியாலயம் முதலாமிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளது.

பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான எல்லே  சுற்றுப் போட்டி திருகோணமலையில் திங்கட்கிழமை (07) நடைபெற்றது. 

மாகாணத்திற்கு மூன்று பாடசாலை அணிகள் என 27 பாடசாலை அணிகள் பங்குபற்றிய பெண்களுக்கான எல்லே சுற்றுப் போட்டியின இறுதிப் போட்டி கிழக்கு மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட  காயன்குடா கண்ணகி வித்தியாலயம் மற்றும் இரத்தினபுரி மொறக்கட்டிய மகா வித்தியாலய அணிகளுக்கிடையில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் காயன்குடா கண்ணகி வித்தியாலயம் வெற்றி முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்டது.

காயன்குடா கண்ணகி வித்தியாலயம் கடந்த (2023) வருடம் நடைபெற்ற மாகாண மட்டப் போட்டியில் முதலிடம் பெற்றதுடன் தேசிய மட்ட போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.