குருக்கள்மடம் ஏத்தாளைகுளம் பகுதியில் தீ பரவல் -கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது

(சிந்து)

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏத்தாளைக்குளம் காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.


களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏத்தாளைக்குளம் காட்டுப்பகுதியில் இந்த தீ சம்பவம் ஏற்பட்டுள்ளது.
ஏத்தாளைக்குளம் மற்றும் அதனை அண்டிய பகுதியானது சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலயமாகவும் பறவைகள் சரணாலயமாகவும் இருந்துவருகின்றது.
இந்த நிலையில் இன்று அப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த களுவாஞ்சிகுடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை உத்தியோகத்தர்கள் தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் காரணமாக தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக பாரிய சேதகங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த பகுதிக்கு வருகைதந்த வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களும் குறித்த தீவிபத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த தீச்சம்பவம் தற்செயலான தீச்சம்பவமாக அல்லது திட்டமிட்ட செயற்பாடுகளா என்பது தொடர்பிலான தகவல்கள் இதுவரையில் வெளியாகாத போதிலும் இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.