இலங்கையின் பிரபல பாடசாலைகளை வென்று சம்பியன் பட்டத்தை பெற்ற புனித மிக்கேல் கல்லூரி


13வயதுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய டென்னிஸ் சுற்றுப்போடியில் ஆண்களுக்கான பிரிவில் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்ட மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் தலைமையில் பாடசாலையின் உள்ளக அரங்கில் நடைபெற்றது.
அண்மையில் பாடசாலைகளுக்கு இடையிலான சுற்றுப்போட்டியில் இலங்கையின் பிரபல பாடசாலைகளான கொழும்பு ரோயல் கல்லுரி, ஷாகிறா கல்லுரி,காலி ரிச்மண்ட் கல்லுரி என்பவற்றை புனித மிக்கேல் கல்லூரி வெற்றுகொண்டது.
அதனை தொடர்ந்து அரை இறுதியில் கொழும்பு தேஸ்ரேன் கல்லுரியை  வெற்றி பெற்ற புனித மிக்கேல் கல்லூரி, இறுதி போட்டியில் குருநாகல் மல்லிய தேவ கல்லுரியை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை தனதாக்கி கொண்டது.
13 வயதுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய டென்னிஸ் சுற்றுப்போடியில் ஆண்களுக்கான பிரிவில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி இந்த ஆண்டுக்கான சூடி சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டது.