மட்டக்களப்பில் விசேடதேவைக்குரிய நபர்களுக்கான உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் . தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி ச.கோணேஸ்வரன் ஒருங்கிணைப்பில் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (05) வழங்கி வைக்கப்பட்டன.
மாவட்டத்தில் விசேட தேவைக்குரிய நபர்களின் அன்றாட நடவடிக்கையினை இலகுவாக மேற்கொள்வதற்கு இவ் உபகரணங்கள் முஸ்லிம் கியுமனிட்டி, எம்.ஜே.எப் மற்றும் சமூக சேவை திணைக்களத்தின் அனுசரனையில் வழங்கி வைக்கப்பட்டன.



