வாழைச்சேனையில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம் -ஒருவர் கவலைக்கிடம்


வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பகுதியில் திங்கட்கிழமை (25) காலை 10.30. மணியளவில் பஸ்ஸ{டன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில், ஒருவர் கவலைக்கிடமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஓட்டமாவடி - மீராவோடை ஊடாக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபையின் வாழைச்சேனை கிளை பஸ் வண்டியில் மோட்டார் சைக்கிள் மோதி இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த வீதியால் மூன்று மோட்டார் சைக்கிளில் ஓட்டப்பந்தயத்தில் ஈடுப்பட்ட இளைஞர்களே இவ் விபத்தில் சிக்கியுள்ளனர்.

இதில், இருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

மேலும்  இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.